போலீஸ் படைக்கு 100 ஏக்கர் நிலம் எஸ்.பி.,யிடம் தாசில்தார் ஒப்படைப்பு
போலீஸ் படைக்கு 100 ஏக்கர் நிலம் எஸ்.பி.,யிடம் தாசில்தார் ஒப்படைப்பு
ADDED : ஆக 03, 2024 11:31 PM

தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில், கே.எஸ்.ஆர்.பி., என்ற கர்நாடக ஸ்டேட் ரிசர்வ் போலீஸ் பெட்டாலியன் அமைப்பை உருவாக்க 100 ஏக்கர் நிலத்துக்கான அரசு ஆவணங்களை தாசில்தார் நாகவேணி, தங்கவயல் எஸ்.பி.,சாந்த ராஜுவிடம் அளித்தார்.
தங்கவயலில் புதியதாக போலீஸ் பயிற்சி நிலையம் ஏற்படுத்த கர்நாடக சட்டசபையில் தீர்மானிக்கப்பட்டது.
தங்கவயலில் இதற்கான இடத்தை, தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா பரிந்துரையின் பேரில் உலகமதி அருகே 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 100 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை நேற்று தங்கவயல் தாசில்தார் நாகவேணி, எஸ்.பி., சாந்தராஜுவிடம் வழங்கினார்.
பின், அந்த இடத்தை எஸ்.பி., சாந்த்ராஜு, தாசில்தார் நாகவேணி ஆகியோர் பார்வையிட்டனர்.
தங்கவயலில் கே.எஸ்.ஆர்.பி., பெட்டாலியன் அமைக்கத் தேவையான நிலத்துக்கான ஆவணங்களை தாசில்தார் நாகவேணி, எஸ்.பி., சாந்த ராஜுவிடம் வழங்கினார். இடம்: தங்கவயல்.