ADDED : ஜூலை 21, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்டியாலா : தமிழகத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவி, பஞ்சாபில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் சுபாஷினி, 29. இவர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தார். சில நாட்களாக மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதி அறையில் தங்கியிருந்த அவர், விஷ ஊசியை தன் உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் ராஜேந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் வந்த பின், உடற்கூறு ஆய்வு நடத்தப்படும் என கூறிய போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.