sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ரிசார்ஜ் கிணறு' அமைத்து நீர் சேமிப்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 'அட்வைஸ்'

/

'ரிசார்ஜ் கிணறு' அமைத்து நீர் சேமிப்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 'அட்வைஸ்'

'ரிசார்ஜ் கிணறு' அமைத்து நீர் சேமிப்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 'அட்வைஸ்'

'ரிசார்ஜ் கிணறு' அமைத்து நீர் சேமிப்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 'அட்வைஸ்'


ADDED : மார் 28, 2024 05:14 AM

Google News

ADDED : மார் 28, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : பருவமழை சரியாக பெய்யாததாலும், வறட்சியாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தீர்ப்பதற்காக, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

பெங்களூரு தண்ணீர் பிரச்னைக்கு, தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி, புதிய ஆலோசனை கூறியுள்ளார். 'எக்ஸ்' வலைதளத்தில் தன் பக்கத்தில் அவர் கன்னடத்தில் வெளியிட்ட பதிவு:

நாம் அனைவரும் அறிந்தபடி, தண்ணீர் மிகவும் விலையுயர்ந்த பொருள். தண்ணீர் பற்றாக்குறை அன்றாட வாழ்க்கையை கடினமாக்குகிறது. பெங்களூரில் இன்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம். நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்க உதவும் வீடுகளை கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

பெங்களூரில் உள்ள எனது பண்ணை வீட்டிற்கு நான் செய்ததை இங்கே பகிர்கிறேன். ஆங்காங்கே 20 - 36 அடி ஆழமுள்ள 'ரீசார்ஜ் கிணறுகள்' அமைத்து, மேற்பரப்பில் நீர் பாய்ச்சுவதற்கு போதுமான வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிணற்றிலும் ஒரு வடிகட்டி அமைப்பு உள்ளது. அதில் சிறிய சிறிய கற்கள், மணல் கொட்டப்பட்டுள்ளன. அதன் வழியாக நீர் கடந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

இதனால்,- அதிக தண்ணீரை சேமித்து, ஆழமான நீர்நிலைகளை அடைய, அடியின் மூலக்கூறில் உள்ள நுண்துளை அடுக்குகள் வழியாக தண்ணீரை மெதுவாகப் பாய்ச்ச வழி ஏற்படுத்தும்.

பெர்மாகல்ச்சர் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளேன். பெர்மாகல்ச்சர் சுற்றுச்சூழலைப் புத்துயிர் பெறச் செய்யும் வட்டக் கொள்கையில் செயல்படுகிறது. பெர்மாகல்ச்சரின் முக்கிய விளைவு தண்ணீர் தேவையை குறைப்பதாகும். இறந்த இலைகள் மற்றும் மரக் கழிவுகளை பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சிக்கொள்கிறது.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீரைச் சேமிக்கவும், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை உருவாக்கவும் முடியும். அந்தக் காட்சிகளை இங்கே பகிர்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us