மகா திருடர் மீது 'நோ ஆக் ஷன்'
ப.பேட்டை பஸ் நிலையம் அருகே பிப்ரவரி 25 ம் தேதி, கோல்டு சிட்டியின் நகை வியாபாரியிடம் மர்ம கும்பல் 2.6 கிலோ தங்க நகைகளை திருடியது. அந்த கும்பலை பிடிக்க, போலீசார், ஆந்திரா, ஒரிசா சென்றனர். சிலரை கைது செய்தது. 1.450 கிராம் தங்கம் பறிமுதல் செய்ததாக கூறினாங்க. பறிமுதல் செய்ததில், முழுமையாக கணக்கில் காட்டாமல், மறைத்ததாக தெரிய வந்திருக்கு.
இதுல ஒருத்தரு, வெளி மாவட்டத்துக்கு போனார். பின், தனக்கு உடல் நலம் சரியில்லை; லீவு வேணுமுன்னு சொல்லி, டியூட்டிக்கு வரலையாம். இதற்கிடையில, பறிமுதல் செய்த நகைகள் குறைந்த விபரம் பத்திக்கிச்சி. அந்த நபர் மீது சந்தேகம் ஜாஸ்தி ஆச்சு.
நகை திருடர்களை கம்பி எண்ண வெச்சிட்டாங்க. ஆனால் அந்த திருடர்களிடமே திருடிய 'மகா திருடர்' மீது நோ ஆக் ஷன். விஷயம் தெரிஞ்சவங்க சொல்வதெல்லாம் நிஜமா?
ஊழல் வெளி வர போகுது!
அசெம்பிளி தேர்தலுக்கு பெறகு, லோக்கல் பாலிடிக்ஸ் பற்றி, யாரும் கண்டுக்கவே இல்லை. இதனால கோல்டு சிட்டியில், மக்கள் பிரச்னைகளை பட்டியல் போட்டு, பூக்கட்சியில் சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த கிராமத்து பூக்காரர், அறக்கட்டளை பேரில் சமூக சேவையில் இறங்கி இருக்கிறார்.
முதற் கட்டமாக மருத்துவமனையில் உருளுகிற முறைகேடு பற்றி போராட்டம் ஆரம்பிக்க போறாராம். இனிமேல் தான் அரசியல் சூடு் பிடிக்க போகுதாம். 100 கோடி ரூபாயில் உருவான சாலையின் அவலத்தை வீடியோ படம் எடுத்துட்டாங்களாமே. இதை வச்சு போராட்டம் பண்ணுவாங்களாம்
வாய் பேச்சு போதுமா?
கர்நாடக மாநில எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் கோல்டன் சிட்டி சொர்ணா நகர் மாணவி 625 க்கு 623 மதிப்பெண் வாங்கி நகருக்கு கவுரவம் ஏற்படுத்தினாரு.
அசெம்பிளி மேடம் உட்பட நிறையபேர் வீட்டுத் தேடி வந்து 100 ரூபாய் சால்வை, பூங்கொத்து கொடுத்தனர். இது போதுமென நெனச்சிட்டாங்க.
மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வசூலிக்கிற பள்ளிக்கூடம், வெறும் வாழ்த்து சொன்னார்களே தவிர, மேற்படிப்புக்கு உதவுவதாக 'உத்தரவாதம்' சொல்ல யாருக்கும் மனசே இல்லை.

