ADDED : செப் 06, 2024 05:49 AM
தொடரும் தாமதம்
குப்பம் -- மாரிகுப்பம் 15 கி.மீ., இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டம், 25 ஆண்டுகளாகியும் வேலை இன்னும் முழுமை அடையவில்லை. வேலையை முடிக்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேணுமோ. 200 'சி'க்கும் அதிகமாக ரயில்வே துறை வாரி கொடுத்தும் இன்னும் எவ்வளவு தான் தேவைப்படுகிறதோ, அதில் எத்தனை பாகம் கமிஷன் தரணுமோ. தாமதம் ஏற்பட, இப்போது தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஆசைக்கு பஞ்சமில்லை
கோல்டு மைன்ஸை, மாநில சுற்றுலா துறையின் பெரிய ஆபிசரு வந்து பார்வையிட்டார். ஐந்து விளக்கு பகுதியில் உள்ள ஹென்றீஸ் சுரங்கம் மூடப்பட்டு, 24 ஆண்டு கடந்து, இயந்திரங்கள் துருப்பிடித்து, சுரங்கத்தில் நீர் நிரம்பி இருப்பது பற்றி விசாரித்தார். 7,000 அடி பாதாள சுரங்கத்தை சுற்றுலா மையமாக்க, சாத்தியம் ஆகுமா என முதல் சுற்று ஆய்வு நடத்தி இருக்காரு.
ஏற்கனவே சுரங்கத்தில் நட்சத்திர ஹோட்டல் நடத்தலாம் என, பல்லாரி இரும்பு கனிம அதிபர் சுரங்க அமைச்சராக இருந்த போது சொல்லி விட்டு சென்றார். அது கிடப்பில் போடப்பட்டது.
கோல்டு மைன்ஸுக்காக, தெற்காசியாவில் முதல், நீர் மின் உற்பத்தி நிலையம் ஏற்படுத்தி ராட்சத பம்புகளை இயக்கிய மின் ஸ்டேஷனை பொருட்காட்சி ஆக மாற்ற போவதாக சொல்லி சென்றார். அவரும் மறந்து விட்டார்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆசைக்கு பஞ்சமில்லை. ஆனால் உருப்படியான வேலை ஒண்ணுமே நடக்கலையே.
தரமில்லா குரு பவன்
ஆசிரியர் தின விழா, இனிமேல் ரா.பேட்டையில் உளட 'குரு பவனில்' தான் நடக்கும் என்றாங்க. ஆனால், விழாவை பாரண்டஹள்ளி திருமணமண்டபத்தில் நடத்தியது ஏனோ.
அப்படியானால் பல லட்சம் ரூபாய் செலவழித்து, கட்டப்பட்ட குரு பவன் கட்டடம் எதற்காக பயன்படுத்துறாங்கன்னு தெரியலையே.
ஏற்கனவே 20 ஆண்டுகளாக கட்டட பணி முடியாமல் இருந்தது. கடந்த ஆண்டு குருபவனில் தான் விழா நடத்தினாங்க. இம்முறை என்னானதோ, இடத்தை மாற்றிட்டாங்க.
அங்கு இருந்த தேசப்பிதா சிலை எங்கே போனது. மறுபடியும் நிறுவப்படுமா. இது தேசபக்தி உள்ளவர்கள் கருத்தாக உள்ளது.
குரு பவன் எல்லா தகுதியுடன் எப்போதுஇயங்குமோ.
ஆம்புலன்சுக்கும் வியாதியா?
மாரி குப்பம் பகுதியில் மூதாட்டி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்தார். அவரை பார்த்த சிலர், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தொடர்புகொண்டுள்ளார். நோ ரெஸ்பான்ஸ்.
உடனடியாக, காக்கி உங்கள் நண்பன் என்ற112 நம்பர் வாகனத்தை வரவழைச்சாங்க. அந்த மூதாட்டி உயிரிழந்து விட்டதாக, மருத்துவபரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்தார்.
கோல்டு சிட்டியில் ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறதா என்றசந்தேகம் எழுந்துள்ளது. அவசரத்துக்கு பயன்படாத ஆம்புலன்ஸுக்கு என்னவியாதியோ.
முதலில் அந்த வாகனத்துக்கு சிகிச்சைஅளியுங்களே.