sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் செக்போஸ்ட்!

/

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!


ADDED : செப் 15, 2024 11:10 PM

Google News

ADDED : செப் 15, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏரி மண் திருட்டு!

மாரிகுப்பம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்பம்பள்ளி ஏரியில் மண் திருடுவது தொடர்கிறது. ஏற்கனவே இப்பகுதியில் சட்டவிரோதமாக, மரங்களை வெட்டி விற்பனை செய்வதாக சொன்னாங்க. ஆனால், யார் பார்வையிலும் படல.

தாலுகா பஞ்சாயத்து ஆபீசரு, ஊழியர்கள் இருக்காங்க; ஆனாலும் மரம் போனால் என்ன, ஏரி காணாமல் போனால் என்ன என்று உறக்கத்தில் இருக்காங்க.

இதுவரையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மண்ணும், மரமும் கொள்ளை போனதாக கிராம ஜனங்க சொல்றாங்க. இனியாவது தடுப்பாங்களா என்பதே கேள்வி.

----

* மணல் கயிறு!

செங்கோட்டைக்காரர் கோல்டு சிட்டிக்கு வந்தாரு. ஓரிரு மைனிங் தொழிற் சங்க சொசைட்டியினரை சந்திச்சாரு. தனக்கு கோல்டு மைனிங் பிரச்னை முழுமையாக தெரியாது. இங்குள்ள எல்லா சங்கங்களும் ஒண்ணா சேர்ந்து ஒரு முடிவோடு வாங்க. தீர்த்து வைக்கலாமென சொல்லி இருக்காரு.

இதை தானே முன்னவர்களும் சொல்லி காலத்தை கடத்திட்டாங்க. இந்த ஜென்மத்தில் 18 சங்கமும், புதியதாக இருக்கும் நான்கு சொசைட்டிகளும் இணைவது என்பது மணலை கயிறாக திரிக்கும் கதை தான்.

கோல்டு மைன்ஸ் தொழிலாளர் எதிர்பார்க்கிற குடியிருக்கும் வீடுகள் சொந்தம்; நிலுவைத் தொகை. இதை நிறைவேத்தினா, செங்கோட்டைகாரர் தான் நிலையான 'ஹீரோ'.

---------

* புள்ளி வச்சாச்சு!

இப்பவும், எப்பவும் சொல்வேன், கோல்டு சிட்டியில் மாநில கேபிடல் குப்பைகளை கொட்ட விட மாட்டேன். குப்பையை முன் வைத்து அரசியல் லாபம் தேடுறாங்க. இது அவர்களுக்கு பயன் தராது என கை கட்சியின் அசெம்பிளிக்காரர் அழுத்தமாக, நம்பிக்கையாக சொல்கிறார். ஆனால், ஜனங்க மனசில நம்பிக்கை ஏற்படல; குழப்பம் நீடிக்குது. அரசின் முடிவில், கேபிடல் சிட்டி குப்பையை கொட்டுவது உறுதி. இவ்விஷயத்துல, டி.சி.எம்., புள்ளி வெச்சிட்டாராம்.

தினமும் 300 லாரிகளில் குப்பைங்க வந்து சேரப்போகுது. கோல்டு நகரை என்ன செய்ய காத்திருக்காங்களோ. இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரப்போகுதென, பெயர் சொல்ல விரும்பாத மாநகர ஆபீசர்களே சொல்றாங்க.

------

* அவமதிக்கலாமா?

குரு பவன் வளாகத்தில், தேசப்பிதா சிலை இருந்தது. அது எங்கே போனது. இதுவரை யாருமே கவனிக்க வில்லை. தேசப்பிதா சதுக்கத்தில் சிலை வைத்த கல்வெட்டை அகற்றி, வளாகத்தில் எறிந்துள்ளதை மீண்டும் பதிக்கவே இல்லை. முனிசி., பெரிய ஆபீசர், அசெம்பிளிகாரர் கவனத்திற்கு சென்றும் கூட அலட்சியமாக இருக்காங்க. தேசப்பிதாவை அவமதிப்பு செய்யலாமா என தேச பக்தர்கள் வருந்துறாங்க.

***






      Dinamalar
      Follow us