ADDED : ஜூலை 04, 2024 02:37 AM
முனிசி., நிலம், பள்ளி வசம்!
தங்கவயல் முனிசி.,யில் நடந்து வரும் பல முறைகேடுகள் குறித்து ஜனங்க பேச தொடங்கி இருக்காங்க.முனிசி.,க்கு சொந்தமான இடத்தை ஒரு தனியார் பள்ளி வளைத்து காம்பவுண்ட் போட்டு சொந்தம் ஆக்கியது. ஆரம்பத்தில் கட்ட விடமாட்டோம் என ஓவராக கூவி, பின்னர் செட்டில்மென்ட் செய்து கண்டுக்காமல் கட்டி முடிக்க வைத்தது யார்.
இதில் எத்தனை, 'எல்' வீட்டுக்கு வந்தது என்பதை லோக் ஆயுக்தாவுக்கு புகார் செய்ய ஆவணங்கள் சேகரிக்க தொடங்கி இருக்காங்க. எல்லாமே மக்கள் பிரதிநிதிகளின் தப்பாட்டம் என்பதை ஜனங்க புரிந்து கொண்டாங்க. இது குறித்து முதல் கட்டமாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அந்த பள்ளியின்நிலத்தின் அளவு கேட்டிருக்காங்க. இதன் பணி ஆரம்பமாகி விட்டது.
அழிந்து போன பெயர் பலகைகள்!
அழிந்து கிடந்தஆ.பேட்டை மார்க்கெட் பெயர் பலகையை புதுசா எழுதிட்டாங்க. பல மொழிகள்பேசும் இப்பகுதியில் மாநில மொழியில் மட்டுமேபெயர் எழுதி இருக்காங்க.அரசாணையில் 60 சதவீத மாநில மொழியும் மற்றவை 40 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிவித்தும், ஒரே மொழியில் பெயர் பலகை வந்து விட்டது.
எப்படியோ பெயர் பலகை அழிந்து போனதற்கு மறுவாழ்வு கிடைத்திருக்குது. இதேபோல் முனிசி., எதிரில் உள்ள அழிந்து போன நேதாஜி பூங்கா, நேரு பூங்கா பெயர் பலகையில் எப்போது எழுதுவாங்களோ?
ஆக்கிரமிப்பில் சிறுநீர் கழிப்பறை!
ரா.பேட்டை,பெஸ்காம்ஆபீஸ் பக்கத்தில் சஞ்சய்காந்தி நகர்செல்லும் சாலையில்சிறுநீர் கழிக்கும் கழிப்பறைஇருந்தது. அதை அகற்றிட்டாங்க. இதனால் அதே இடத்தில் அச்சம்,வெட்கம் ஏதுமின்றி திறந்த வெளியில் ஆண்கள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. சிறுநீர் கழிக்க வேறு இடமே இல்லாததால் பஸ் நிலைய கழிப்பறைக்கு செல்ல வேண்டும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பொறுமை இல்லாததால் திறந்த வெளியை நாடுறாங்க. எப்படி அந்த இடத்தை ஆக்கிரமிக்காமல் சும்மாவிட்டுவெச்சிருக்காங்க. இதேபோல ரா.பேட்டை எம்.ஜி. மார்க்கெட்வடமேற்கு பகுதியில்இருந்த இரண்டு சிறுநீர் கழிப்பறை நான்கு கடைகளாக மாறி இருக்குது.எனவே, பெஸ்காம் ஆபீஸ் பகுதியில் மீண்டும் சிறுநீர் கழிப்பறை வருமான்னு எதிர்பார்க்குறாங்க.
கை பக்கம் மேலும் ஒருவர்!
பூ கட்சியின், 'மாஜி' அசெம்பிளிகாரர் பவர் புல் தலைவராக இருந்தபோது அவருடன் நடமாடியவங்க,தற்போது ஒருவர் பின் ஒருவராக கூடாரத்தை காலி செய்து வராங்க. முனிசி., மாஜிஅசெம்பிளிகாரரின் ஆதரவாளர் என்று அடையாளம் காட்டிய ஒரு கோல்டு சிட்டி சுயேச்சை கவுன்சிலர், கை கட்சியில் தனது மகனுடன்சேர்ந்து விட்டார். மூவர்ண துண்டு போர்த்திக் கொண்டார். இருக்கிற 35 கவுன்சிலர்களில் ஏற்கனவே 28 கை வசம் இருந்தது. தற்போது மேலும் ஒன்று கூடி 29 ஆகி உள்ளது.இவங்க தான் பிழைக்க தெரிஞ்சவங்கன்னுஊரே பேசுது.