மல்லையா, நீரவ் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்; ரூ.26,645 கோடி இழப்பு
மல்லையா, நீரவ் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்; ரூ.26,645 கோடி இழப்பு
ADDED : டிச 01, 2025 09:39 PM

புதுடில்லி: விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பெரும் தொழிலதிபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத்தொடரில், லோக்சபா காங்கிரஸ் எம்.பி.,முராரிலால் மீனா, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது;
தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். தப்பியோடி பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018ன் கீழ் அவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
15 பேரில் 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டனர். இந்த பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்கள் பெயர்கள் அடங்கும்.
அவர்களால் 2025 அக்டோபர் 31 வரை வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு வட்டி உள்பட ரூ.31,437 கோடியாகும். அசல் தொகை இழப்பு ரூ.26,645 கோடி. இந்த 15 பொருளாதார குற்றவாளிகளால் ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு ரூ.57,082 கோடி ஆகும். இந்த குற்றவாளிகளிடம் இருந்து ரூ.19,817 கோடி மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்து இருந்தார்.
மத்திய அரசு அறிவித்துள்ள தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியல்:
விஜய் மல்லையா
நீரவ் மோடி
நிதின் ஜெ சந்தேசரா
சேத்தன் ஜெ சந்தேசரா
தீப்தி சி சந்தேசரா
சுதர்ஷன் வெங்கட்ராமன்
ராமானுஜம் சேஷரத்தினம்
புஷ்பேஷ் குமார் பெய்ட்
ஹிதேஷ்குமார் நரேந்திரபாய் படேல்

