போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு தப்பி சென்ற ஆந்திர கும்பல்
போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு தப்பி சென்ற ஆந்திர கும்பல்
ADDED : ஜூலை 22, 2024 06:35 AM
சித்ரதுர்கா: போலீஸ் ஜீப் மீது கல் வீசி விட்டு, ஆந்திர திருட்டு கும்பல் வாகனத்தில் தப்பி சென்றது.
சித்ரதுர்கா செல்லகெரே குடாப்பூர் அருகே நேற்று முன்தினம் இரவு, நாயக்கனகட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக ஆந்திர பதிவு எண் கொண்ட, 'பொலீரோ பிக் அப்' வாகனம் வந்தது. வாகனத்தை நிறுத்தும்படி, போலீசார் கையசைத்தனர்.
ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டினார். இதனால் போலீசார், ஜீப்பில் வாகனத்தை துரத்தி சென்று மடக்கினர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய ஏழு பேர், போலீஸ் ஜீப் மீது சரமரியாக கல் வீசினர். இதில் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
எஸ்.ஐ., சிவகுமார் வானத்தை நோக்கி ஒரு ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு சரணடையும்படி எச்சரித்தார். ஆனால் ஏழு பேரும் வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். விசாரணையில், அவர்கள் திருட்டு கும்பல் என்பது தெரிந்தது.