ADDED : ஏப் 04, 2024 04:26 AM

தார்வாட், : தார்வாட் அருகே மாநில அளவிலான மாட்டு வண்டிப் பந்தயம் நேற்று நடந்தது. முதல் பரிசு பெற்றவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
தார்வாட் நவலகுந்து திர்லாபுரா கிராமத்தில், ஆண்டுதோறும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான மாட்டு வண்டிப் பந்தயம் நடப்பது வழக்கம். வரும் 9ம் தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு திர்லாபுரா கிராமத்தில், மாநில அளவிலான மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது. பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள், இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இந்த பந்தயத்தில் பழைய ஹூப்பள்ளியின் சித்தகுரு பிரசன்னாவின், மாடுகள் முதல் பரிசை வென்றது. அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த ஈஸ்வர லிங்கேஸ்வருக்கு 75 ஆயிரம் ரூபாயும்; மூன்றாம் இடம் பிடித்த ஜோதிர்லிங்க பிரசன்னாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

