வீட்டு வாசலுக்கு டெலிவரி திட்டம் மீண்டும் துவக்க அரசு முடிவு
வீட்டு வாசலுக்கு டெலிவரி திட்டம் மீண்டும் துவக்க அரசு முடிவு
ADDED : ஜூலை 06, 2024 02:26 AM
விக்ரம் நகர், :பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே டெலிவரி செய்யும் திட்டத்தை மீண்டும் துவக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் பல்வேறு துறைகளின் அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், அவற்றைக் கொள்ளையடிக்கும் இடைத்தரகர்களின் பங்கைக் குறைக்கவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தால் 2018 செப்டம்பரில் வீட்டு வாசல் டெலிவரி திட்டம் துவங்கப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 30 சேவைகள் வழங்கப்பட்டது. இது படிப்படியாக 100 ஆக உயர்த்தப்பட்டது.
இதற்காக '1076' ஹெல்ப்லைன் எண் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணை நிர்வகித்த ஏஜென்சிகளின் ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து, வீட்டு வாசல் டெலிவரித் திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை மீண்டும் துவங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திட்டத்தின் வாயிலாக பலனடையும் சேவைகளின் எண்ணிக்கையை 200 ஆக விரிவுபடுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மற்ற ஏஜென்சிகளை இணைத்து ஹெல்ப்லைனை மறுதொடக்கம் செய்வதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.