ADDED : பிப் 27, 2025 01:12 AM

சமூக தீமைகளை அகற்றுவதில், துறவி சமூகத்தின் பங்கு மிகவும் மகத்தானது. நம் நாட்டில் பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை துறவியர் உறுதி செய்துள்ளனர். நாடு தற்போது பெண்கள் வளர்ச்சியில் இருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.
திரவுபதி முர்மு, ஜனாதிபதி
ரூ.1 லட்சம் கோடி முதலீடு!
அசாமில் நடந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில், சாலை போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, பல்வேறு அரசு நிறுவனங்கள், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. இவற்றை செயல்படுத்த திறமையான மனிதவளம் தேவைப்படும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
புறக்கணிக்க வேண்டும்!
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவில் பங்கேற்காமல், உத்தவ் தாக்கரே, ராகுல் போன்றோர் ஹிந்துக்களை அவமதித்துள்ளனர். தேர்தல்களின் போது, அவர்களை ஹிந்து வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும். இனியும் அவர்களை நாம் நம்பக்கூடாது.
ராம்தாஸ் அத்வாலே, மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி

