திருமணத்துக்கு மறுத்த காதலனை 'நறுக்கிய' பெண் டாக்டர்
திருமணத்துக்கு மறுத்த காதலனை 'நறுக்கிய' பெண் டாக்டர்
ADDED : ஜூலை 02, 2024 10:58 PM

பாட்னா: திருமணம் செய்யாமல் நழுவிய காதலனின் மர்ம உறுப்பை நறுக்கிய பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பீஹாரின் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த, இளம் பெண் பயிற்சி டாக்டர், அதே பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் ஒருவரை காதலித்து வந்தார். திருமணமாகாத இருவரும், கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்யும்படி, தன் காதலரிடம் பெண் டாக்டர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, கவுன்சிலர் தள்ளி போட்டு வந்தார்.
கடைசியில், பதிவு திருமணத்துக்கு அவர் ஒப்புக் கொண்டார். அதன்படி, பதிவாளர் அலுவலகத்தில் அந்த பெண் டாக்டர் காத்திருந்தார். ஆனால், கவுன்சிலர் வரவில்லை. இதனால் அவர் ஆத்திரமடைந்தார். தன் வீட்டுக்கு வரும்படி காதலனை அவர் வரவழைத்தார்.
அங்கு வைத்து, அவருடைய மர்ம உறுப்பை அறுத்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கம் இருந்தவர்கள், காதலனை மருத்துவமனையில் சேர்த்துஉள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட பெண் டாக்டர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.