ADDED : ஜூன் 19, 2024 04:49 AM
விஜயபுரா : விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹால் ஹாடலகேரி கிராமத்தில் வசித்தவர் நீலம்மா, 16. நேற்று மதியம் எருமை மாடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். கிராமத்தை சேர்ந்த சிவப்பா என்பவரது, விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள, பண்ணை குட்டையில், எருமை மாடுகளை தண்ணீர் குடிக்க வைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பண்ணை குட்டையில் தவறி விழுந்தவர், தண்ணீருக்குள் மூழ்கி தத்தளித்தார். அந்த வழியாக வந்த முத்தப்பா, 24, சிவு, 25 ஆகியோர், நீலம்மாவை காப்பாற்ற பண்ணை குட்டையில் குதித்தனர். ஆனால் அவர்களும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் மூன்று பேரும் உயிரிழந்தனர்.
l விஜயபுரா டபேரி கிராமத்தில் வசிக்கும் தம்பதியின் மகள் பிந்து, 16. மகன் ரோகித், 8. இவர்கள் இருவரும் நேற்று மதியம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர். ஏரிக்குள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தனர். இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் உயிரிழந்தனர்.
குட்டையில் மூழ்கியும், மின்சாரம் பாய்ந்தும் மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.

