கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை அனுமதி மறுப்பு
கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை அனுமதி மறுப்பு
UPDATED : ஏப் 28, 2024 09:21 PM
ADDED : ஏப் 28, 2024 09:17 PM

புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள  கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவதற்கான அனுமதியை  திகார் சிறை  ரத்து செய்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில்  கைது செய்யப்பட்டு உள்ள கெஜ்ரிவால் திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்  கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்துள்ளது திகார்சிறை நிர்வாகம்.  இது பெரும் சரச்சையை உருவாக்கியது. இதனையடுத்து விளக்கம் அளித்துள்ள சிறை நிர்வாகம், சிறையின் விதிப்படி  கைதிகள்  வாரத்திற்கு இரு முறை மட்டுமே தங்களை சந்திக்க வருபவர்களிடம் பேசலாம்.
அதன் படி நாளை 29-ம்தேதி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவாலை சந்திக்கிறார். தொடர்ந்து 30-ம் தேதி பஞ்சாப் முதல்வரும்  கெஜ்ரிவாலை சந்திக்கிறார். இதன் காரணமாக இந்த வாரத்தில் இரண்டு சந்திப்புகள் நிகழ உள்ள  நிலையில்  கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

