ADDED : செப் 07, 2024 01:23 AM
தமிழகத்தில் பலரை திருப்திப்படுத்தணும்!
தமிழகத்தில் தொழில் துவங்க, பலரை திருப்திபடுத்த வேண்டியுள்ளது என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டிஉள்ளார்.
அவரது அறிக்கை:
தொழில் துவங்க எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் என்று கூறப்படும் கேரளம் முதலிடத்தை பிடித்துள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அடிக்கடி பெருமைப்பட்டு கொள்கிறது.
ஆனால், அவை ஒப்பந்தங்களாகவே உள்ளன. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டால் தமிழக அரசு மறுக்கிறது.
தமிழகத்தில் தொழில் துவங்க பலரை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், தொழில் துவங்க எவரும் முன்வர மறுப்பதாகவும், தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், தொழில் துவங்குவதற்கான சீர்திருத்தங்களை செய்யும் பட்டியலில் தமிழகம் இல்லை என்பதை தான், தரவரிசை பட்டியல் சுட்டிக் காட்டுகிறது.