ADDED : மே 13, 2024 06:33 AM

சாம்ராஜ் நகர்: பண்டிப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் பழுதானதால், பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் அருகில் பண்டிப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான தமிழக, கர்நாடகா மக்கள் சென்று வருகின்றனர்.
நேற்று காலை இவ்வழியாக சென்ற கனரக வாகனம், சரியாக குண்டுலபேட்டின் மேலுகமனஹள்ளி அருகே பண்டிப்பூர் நுழைவு வாயில் முன் பழுதுடைந்து நின்றது.
இதனால் பல கி.மீ., துாரம் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. இது தொடர்பாக போக்குவரத்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள், கனரக வானகத்தை மெக்கானிக் மூலம் சரி செய்தனர். பின் போக்குவரத்து சீரானது.
கோடை விடுமுறை முடிந்து, மே 20ம் தேதிக்கு பின் பல பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தங்கள் குழந்தைகளை, சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்ற பெற்றோர் அவதிப்பட்டனர்.