ADDED : ஏப் 04, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல் : திருடப்பட்ட லேப்டாப்கள், மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.
கொல்லுகுருவன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், 22, முனியப்பா, 58, ஆகிய இருவரும் பெங்களூரு, டில்லி ஆகிய இடங்களில் திருடி, எட்டு லேப் டாப்கள், 15 மொபைல் போன்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கேசம்பள்ளி, பேத்தமங்களா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
திருடப்பட்ட பொருட்களை மீட்டு இருவரையும் போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை தங்கவயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

