ADDED : ஜூலை 11, 2024 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: முதுகுவலி காரணமாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் , டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு 72 , திடீரென கடுமையான முதுகுவலி ஏற்பட்டதால் அவதியுற்றார். உடனடியாக டில்லி எய்ம்ஸ் மருத்தவமனை பழைய தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர் ரிமாதாதா, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.