ADDED : ஆக 07, 2024 06:05 AM

விஜயபுரா: விஜயபுரா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் நேற்று அளித்த பேட்டி
எங்கள் கட்சியின் தலைவராக உள்ள விஜயேந்திராவிடம், பல அரசியல் தலைவர்களின், 'சிடி' உள்ளது. அதை வெளியிடுவேன் என்ற மிரட்டி அரசியல் செய்கிறார். சிடி வெளியிடுவதில் விஜயேந்திரா ஹீரோ.
எந்த அடிப்படையில், அவரை கட்சி மேலிடம் தலைவர் ஆக்கியது என்று எனக்கு தெரியவில்லை. மாநில தலைவராக இருக்கும் தகுதி, அவருக்கு கிடையாது. அவரே மிகப்பெரிய ஊழல்வாதி. ஊழலுக்கு எதிராக, அவர் பாதயாத்திரை நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
'வக்பு' சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதை வரவேற்கிறேன். நாட்டில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது.
நீதிமன்றத்திற்கு கூட அந்த நிலத்தை கைப்பற்ற அதிகாரம் இல்லை. வக்பு சட்டத்தின் மூலம் பல முறைகேடுகள் நடக்கிறது. இதனால் சட்டத்தை மாற்றி அமைக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.