UPDATED : செப் 17, 2024 09:36 PM
ADDED : செப் 17, 2024 09:32 PM

கோல்கட்டா :
மேற்கு வங்கத்தில் டாக்டர்களின் தொடர் போராட்டத்தையடுத்து கோல்கட்டா
நகர போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேற்கவங்க
மாநிலத்தில் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரியின்
31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு
கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது
செய்யப்பட்டார். வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த
வழக்கில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின்
முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பெண்
டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, ஒரு மாதத்துக்கும் மேல் போராட்டம்
நடத்தி வரும் டாக்டர்களுடன் முதல்வர் மம்தா நடத்திய பேச்சுவார்த்தையில்
அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்தார்.
இதன்படி அவர்களின்
முதல் கோரிக்கையான கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் இன்று ( செப்.,17)
அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டு, சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி.யாக
மாற்றப்பட்டார்., அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக 1998 ராஜஸ்தான்
ஐ.பி.எஸ். கேடரான மனோஜ் வர்மா நியமிக்கப்பட்டார்.
தொடந்து மாநில சுகாதார செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

