ADDED : ஏப் 04, 2024 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி, : அம்படகட்டி குரு மடிவாளேஸ்வர மடாதிபதி வீரேஸ்வர சுவாமிகள், பெலகாவி லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்து உள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று அவர் கூறியதாவது:
பெலகாவி லோக்சபா தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தயாராகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், தேர்தலில் போட்டியிட ஆர்வம் உள்ளது.
கட்சி அல்லது அரசியல் தலைவர்கள் மீதுள்ள கோபத்தால் நான் போட்டியிடவில்லை. என் பக்தர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே அவர்களுடன் ஆலோசனை நடத்தி, போட்டியிட முடிவு செய்தேன்.
சமூக மேம்பாடு மற்றும் மக்களுக்கு தொண்டு செய்வதே, எங்களின் குறிக்கோள். பெலகாவி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளில், எங்கள் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் எனக்காக பணியாற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

