ADDED : மார் 31, 2024 03:52 AM

பெங்களூரு, : பா.ஜ., அளித்த புகாரால், ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் நிம்பால்கர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் நிம்பால்கர். இவரது மனைவி அஞ்சலி நிம்பால்கர். உத்தர கன்னடா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். தகவல் மற்றும் மக்கள் தொடர்பு கமிஷனராக ஹேமந்த் நிம்பால்கர், பணியாற்றி வந்தார். அவர் தனது பதவியை பயன்படுத்தி, மனைவிக்கு ஆதரவாக செயல்படுவதாக, தேர்தல் கமிஷனிடம், பா.ஜ., புகார் செய்தது.
இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், ஐ.பி.எஸ்., மேஹந்த் நிம்பால்கரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க, கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி சுகாதார துறை சிறப்பு கமிஷனராக இருந்த, சுரல்கர் விகாஷ் கிஷோர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

