ADDED : மார் 05, 2025 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ரிதுராஜ் ஜா கூறியதாவது:
ஜனவரி 30ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 வழங்கும் திட்டத்துக்கூ ஒப்புதல் பெறப்படும். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி டில்லி பெண்களின் வங்கிக் கணக்குகளில் 2,500 ரூபாய் வரவு வைக்கப்படும்' என கூறியிருந்தார்.
பிரதமர் மோடி அளித்த உத்தரவாதப்படி இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன என்பதைத் தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். டில்லியில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வங்கிக் கணக்கில் 2,500 ரூபாய் வரும் என காத்திருக்கின்றனர்.