ADDED : ஏப் 28, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவஹாத்தி: லோக்சபா தேர்தலையொட்டி வடகிழக்கு மாநிலமான அசாம் தலைநகர் குவஹாத்தியில், காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப் படும்.
இங்கு, ராகுல், சோனியா ஆகியோர் களமிறங்குவது வழக்கம். எனினும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இதை பா.ஜ.,வினர் விமர்சிப்பது சரியல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.

