எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி
எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?: மத்திய அமைச்சர் கேள்வி
ADDED : மே 15, 2024 03:56 PM

புவனேஸ்வர்: எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்? என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளில் வென்று முதல் இடத்தை பிடித்தது. பா.ஜ., 8 இடங்களில் வென்று 2வது இடத்தை பிடித்தது. இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற பா.ஜ., தீவிர முயற்சி எடுத்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ., சார்பில் சம்பல்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் ராகுலை கடுமையாக சாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: ராகுல் பெரிய பொய்யர். எமர்ஜென்சி விதித்து அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தது யார்?. அதை அவரது குடும்பத்தினர் செய்தார்கள். நாட்டில் பா.ஜ., ஆட்சி செய்யும் வரை, எங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் தான் உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

