ADDED : ஏப் 23, 2024 05:24 AM

சிக்கமகளூரு : சிக்கமகளூரு மாவட்டம், கடூரின் தேவரஹள்ளியில் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டம் நடந்தது.
அப்போது தேவகவுடா பேசியதாவது:
தேர்தலுக்காக கர்நாடக மாநில மக்களின் வரிப்பணத்தை, மற்ற மாநிலத்துக்கு கொடுக்கும் காங்கிரஸ் அரசு தேவையா. கர்நாடகாவில் ஊழல் அரசு ஆட்சி அமைத்து உள்ளது. இத்தகைய அரசை ஆட்சியில் இருந்து அகற்றவே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து உள்ளோம்.
நாட்டை நரேந்திர மோடியால் மட்டுமே காப்பாற்ற முடியும். அவர் மீண்டும் பிரதமரானால், நாடு பிழைக்கும். எக்காரணத்தை கொண்டும் ஊழல் அரசு நாட்டை ஆளக்கூடாது. எனவே, மாநில மக்கள் 28 தொகுதிகளிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து, மோடியை பிரதமராக்க வேண்டும்.
வயது முதிர்வு காரணமாகவே, எடியூரப்பா பதவியில் இருந்து இறக்கப்பட்டார். ஆனாலும் மாநிலம் முழுதும் கட்சியின் நலனுக்காக போராடி வருகிறார். மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து, வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.

