மனைவி சொல்லே மந்திரம்: முதல்வராக்க கெஜ்ரிவால் தந்திரம்!
மனைவி சொல்லே மந்திரம்: முதல்வராக்க கெஜ்ரிவால் தந்திரம்!
ADDED : மார் 29, 2024 03:19 PM

புதுடில்லி: 'அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா விரைவில் முதல்வராவதற்காக தந்திரமாக செயல்பட்டு வருகிறார்' என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் மிக குறைந்த நாள் மட்டும் முதல்வராக பதவி வகிப்பார். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா விரைவில் முதல்வராக தந்திரமாக செயல்பட்டு வருகிறார். அவர் வருவாய்த்துறையில் சக ஊழியர் மட்டுமல்ல. அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார்கள்.
ஒன்பது முறை கெஜ்ரிவால் சம்மன்களுக்கு பதிலளிக்கவில்லை. பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். காங்கிரசுக்கு ரூ.1,700 கோடி அபராதம் கோரி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களின் நேரம் முடிந்துவிட்டது. காங்கிரசாரின் வருமானம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறையில் இருந்து மக்கள் பணிகளை பார்ப்பது கடினமாக உள்ளதால், மனைவியை முதல்வர் ஆக்க கெஜ்ரிவால் திட்டம் தீட்டி வருகிறார் என டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

