ADDED : செப் 12, 2024 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகர்கஞ்ச்:கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
கலால் கொள்கை விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மார்ச் மாதம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதே வழக்கில் அவரை ஜூன் 26ம் தேதி சி.பி.ஐ.,யும் கைது செய்தது.
சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த மனுக்கள் மீது நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
அவருக்கு ஜாமின் கிடைக்குமென ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா நம்பிக்கை தெரிவித்தார்.