ADDED : பிப் 14, 2025 11:03 PM
பாகல்கோட்: திருடர்களின் அட்டகாசத்தால், கொதித்தெழுந்த பெண்கள் இரவு உருட்டுக்கட்டையுடன் ரோந்து சுற்றுகின்றனர். 'உலக்கை ஓபவ்வா'வாக மாறியுள்ளனர்.
பாகல்கோட், முதோலில் திருடர்களின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழைந்து, பணம், தங்க நகைகளை திருடி செல்கின்றனர்.
விலை உயர்ந்த பொருட்களையும் விட்டு வைப்பது இல்லை. போலீசாரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
திருடர்களை கண்டுபிடிக்க, வீடுகளில் உள்ள ஆண்கள் இரவு நேரத்தில் காவல் காத்தும் பயனில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு வீட்டில் திருட்டு நடக்கிறது.
இதனால் வெறுப்படைந்து, பெண்களே களத்தில் இறங்கி உள்ளனர். இரவு கையில் உருட்டுக்கட்டையுடன், வீதி, வீதியாக ரோந்து சுற்றுகின்றனர்.
ஒவ்வொருவரும் தைரியசாலி பெண்ணான, 'உலக்கை ஓபவ்வா'வாக மாறியுள்ளனர். பெண்களின் தைரியத்தை, போலீசார் பாராட்டுகின்றனர். தங்கள் பணியை பெண்கள் செய்வதாக கூறுகின்றனர்.

