மக்கள் பிரச்னைகளை தீர்க்கவில்லை பிரஜ்வல் மீது மகளிர் காங்., தலைவி புகார்
மக்கள் பிரச்னைகளை தீர்க்கவில்லை பிரஜ்வல் மீது மகளிர் காங்., தலைவி புகார்
ADDED : ஏப் 20, 2024 04:55 AM

ஹாசன் : ''தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை,'' என, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா அமர்நாத் குற்றம் சாட்டினார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
ஹாசன் மாவட்டத்தின் பிரச்னைகள் குறித்து, அரசு துறைகளின் கவனத்துக்கு கொண்டு வந்து, தீர்வு காண்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா அக்கறை காண்பிப்பது இல்லை. 2019ல் தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக மவுனமாக இருந்தார்.
தேர்தல் நெருங்குவதால், கிராமங்களுக்கு செல்ல துவங்கி உள்ளார். மோடி அலையை ஓரங்கட்டிய மக்கள், மத்திய அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டிக்கின்றனர்.
வாக்குறுதி திட்டங்களால், கிராமப்புற பெண்கள் தவறான பாதைக்கு செல்வதாக கூறிய, முன்னாள் முதல்வர் குமாரசாமியை நான் கண்டிக்கிறேன். பெண்களை பற்றி இவருக்குள்ள மனநிலையை அனைவரும் புரிந்து கொண்டனர். இது தொடர்பாக, மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.
ம.ஜ.த., தன் பெயரில் உள்ள 'மதசார்பற்ற' என்ற வார்த்தையை நீக்குவது நல்லது. ஏனென்றால் தன் கொள்கையை விட்டு கொடுத்துள்ளது; மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

