ADDED : ஜூலை 22, 2024 06:34 AM

கலபுரகி: கலபுரகி சேடத்தில், 'ஸ்ரீ' என்ற பெயரில் சிமென்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை வளாகத்திற்குள் புகை கூண்டு கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார், 26 என்பவர், புகை கூண்டில் இருந்து தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திரகுமார் என்ற தொழிலாளியும், புகை கூண்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதற்கு முன்பும் இரண்டு பேர் இறந்துள்ளனர்.
புகை கூண்டு கட்டுவதில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பலரும் குற்றம் சாட்டினர்.
இதுவரை நான்கு பேர் உயிரிழந்து இருந்தாலும், சிமென்ட் தொழிற்சாலைக்கு கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, சரண பிரகாஷ் பாட்டீல் வரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.