ADDED : ஜூன் 16, 2024 10:54 PM
சிக்கபல்லாபூர்: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், தொழிலாளியை அடித்து கொன்ற நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிக்கபல்லாபூர் டவுன் கோரசபேட் பகுதியில் வசித்தவர் சேகர், 40. இவரது நண்பர் சிவகுமார், 40. இருவரும் கட்டட தொழிலாளிகள்.
நண்பர் என்பதால் சிவகுமார் வீட்டிற்கு சேகர் அடிக்கடி சென்றார். சேகருக்கும், சிவகுமார் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
இது பற்றி அறிந்த சிவகுமார், தனது மனைவியுடன் தொடர்பை கைவிடும் படி, சேகருக்கு புத்திமதி கூறினார்.
ஆனால் அவர் கேட்கவில்லை. நேற்று முன்தினம் இரவு சிக்கபல்லாபூர் போலீஸ் நிலையத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் வைத்து, இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சிவகுமார், சேகரை தாக்கியதுடன் பலமாக கீழே பிடித்து தள்ளினார். தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். சிவகுமார் அங்கிருந்து தப்பி சென்றார். தலைமறைவாக உள்ள அவரை, சிக்கபல்லாபூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.