ADDED : ஆக 21, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, 72. இவருக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நெஞ்சுவலி காரணமாக எய்ம்சில் அனுமதிக்கப்பட்டுள்ள யெச்சூரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
'தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.