ADDED : மார் 11, 2025 11:42 PM

நம் நாட்டை 'பாரத்' என்று தான் அழைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் கூறியுள்ளார். நம் நாட்டுக்கு பாரத், இந்தியா, ஹிந்துஸ்தான் என்று பெயர்கள் உள்ளன. யார் எந்த பெயரில் அழைக்க விரும்புகின்றனரோ அதன்படி அழைக்கலாம்.
ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர்,
தேசிய மாநாட்டு கட்சி
ஏமாற்றும் மஹா., அரசு!
மஹாராஷ்டிரா பட்ஜெட் விவாதத்தில் தேர்தல் சமயத்தில் தந்த வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் வழங்குவது பற்றி, பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி வாய் திறக்கவில்லை. விவசாயக் கடன் ரத்து அறிவிப்பும் இல்லை. இந்த அரசு வெட்கக்கேடான வகையில் நடந்து கொள்கிறது.
ஆதித்யா தாக்கரே
மஹா., எம்.எல்.ஏ., - சிவசேனா உத்தவ் அணி
பேசி தீர்க்க வேண்டும்!
மும்மொழி கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். ஆனால், தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் பேசியது, அவரது பதவிக்கு ஏற்புடையதல்ல. அவரைப் போலவே தான் தி.மு.க., - எம்.பி.,க்களும் தேர்வாகியுள்ளனர்.
பிரியங்கா சதுர்வேதி
ராஜ்யசபா எம்.பி., -
சிவசேனா உத்தவ் அணி