ADDED : அக் 18, 2024 07:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்,:பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
பதான்கோட் உளவுத்துறை மற்றும் குர்தாஸ்பூர் போலீஸ் இணைந்து நடத்திய அதிரடி சோதனை நடத்தினர். இதில், அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ள நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.35 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டுக்குள் போதைப்பொருளை கொண்டுவர ட்ரோன்களைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.