சிறந்த உணவு நகரங்கள்; உலகின் டாப் 20 பட்டியல் இதோ!
சிறந்த உணவு நகரங்கள்; உலகின் டாப் 20 பட்டியல் இதோ!
ADDED : டிச 21, 2024 12:50 PM

புதுடில்லி: உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. முதல் இடத்தை இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரம் பிடித்துள்ளது. டேஸ்ட் அட்லாஸ் இணையதளம் சர்வதேச அளவில், சிறந்த உணவு கிடைக்கும் நகரங்கள் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில், அந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள 17,073 நகரங்கள் பற்றி கருத்து சேகரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.அதன் அடிப்படையில், சிறந்த உணவு கிடைக்கும் 100 நகரங்களின் பட்டியலை அந்த தளம் வெளியிட்டுள்ளது. அதில் டாப் 20 நகரங்கள் விவரம் வருமாறு:
அதன் விபரம் பின்வறுமாறு:
1.நேப்பிள்ஸ், இத்தாலி
2.மிலன், இத்தாலி
3.பொலோக்னா, இத்தாலி
4.ப்ளாரன்ஸ், இத்தாலி
5.மும்பை, இந்தியா
6.ரோம், இத்தாலி
7.பாரிஸ், பிரான்ஸ்
8.வியன்னா, ஆஸ்திரியா
9.டுரின், இத்தாலி
10.ஒசாகா, ஜப்பான்
11.மேட்ரிட், ஸ்பெயின்
12.நியூயார்க், அமெரிக்கா
13.ஜெனோவா, இத்தாலி
14.நைஸ், பிரான்ஸ்
15.லிமா, பெரு
16.ஜகார்த்தா, இந்தோனேசியா
17.க்யாடோ, ஜப்பான்
18.காஸியன்தேப், துருக்கி
19.பெரேரா, இத்தாலி
20.நியூ ஆர்லியன்ஸ், அமெரிக்கா
இந்தியாவின் அமிர்தசரஸ் 43ம் இடம், டில்லி 45ம் இடம், ஐதராபாத் 50ம் இடம், கோல்கத்தா 71ம் இடம், சென்னை 75ம் இடம் பெற்றுள்ளன.
ஆதாரம்:
டேஸ்ட் அட்லஸ் இணையதளம் 17,073 நகரங்கள் தொடர்பாக நடத்திய கருத்து சேகரிப்பு அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.