ADDED : அக் 02, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிஜப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில், 103 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 49 நக்சல்களின் தலைக்கு, 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
நக்சல்களின் வெற்று சித்தாந்தத்தால் வெறுப்படைந்தும், தடை செய்யப்பட்ட சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்புகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் ஏராளமான நக்சல்கள் போலீசில் சரண் அடைய விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பிஜப்பூரில் மூத்த போலீஸ் அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முன், 103 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். அவர்களில், 22 பேர் பெண்கள். இது தவிர 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த 49 நக்சல்களும் அடங்குவர்.