பள்ளி மாணவர்களுக்கு 11 சைக்கிள் கூலி தொழிலாளி மனிதாபிமானம்
பள்ளி மாணவர்களுக்கு 11 சைக்கிள் கூலி தொழிலாளி மனிதாபிமானம்
ADDED : மார் 07, 2024 03:38 AM
ராய்ச்சூர், : கூலித் தொழிலாளி, தன் ஊதியத்தில் ஏழை மாணவர்களுக்கு 11 சைக்கிள்கள் வாங்கிக் கொடுத்தார். இதற்காக 60,000 ரூபாய் செலவழித்தார்.
ராய்ச்சூர் தேவதுர்காவின், மல்கந்தின்னி கிராமத்தில் வசிக்கும் ஆஞ்சனேயா, 40, கூலி வேலை செய்கிறார். இந்த கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி வசதி இல்லை;
பஸ் வசதியும் கிடையாது. மாணவ, மாணவியர் 5 கி.மீ.,யில் உள்ள ஹேமனுார் கிராமத்துக்கு நடந்து சென்று படித்து வந்தனர்.
தினமும் பணிக்குச் செல்லும்போது ஆஞ்சனேயா, நடந்து செல்லும் மாணவர்களை பார்த்து வருந்துவார்.
இவர்களுக்கு உதவும் நோக்கில், 11 சைக்கிள்கள் வாங்கி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆஞ்சனேயா கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் பஸ் வசதி இல்லை. மாணவர்கள், குறிப்பாக சிறுமியர் நடந்து செல்ல முடியாமல், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.
ஆண்டுதோறும், 15 முதல் 20 மாணவியர் படிப்பை நிறுத்துகின்றனர்.
மாணவ - மாணவியருக்கு உதவும் எண்ணத்தில், 60,000 ரூபாய் செலவில், 11 சைக்கிள்களை வாங்கிக் கொடுத்தேன். மாநில அரசு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, மீண்டும் துவக்கினால். மாணவர்களின் படிப்புக்கு வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

