UPDATED : ஜன 22, 2024 03:14 AM
ADDED : ஜன 22, 2024 02:08 AM

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், 11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும், 31 வார கருவை கலைக்க அம்மாநில உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தாய் மாமன் வீட்டில் வளர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த சிறுமி 31 வார கர்ப்பமாக உள்ளார். கருவை கலைக்க அனுமதி கோரி, சிறுமியின் தாய்மாமன், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிறுமியின் உடல் நிலையை மருத்துவக்குழு பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், சிறுமியின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் கருக்கலைப்பு செய்வது அவரது உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கரு 31 வாரம் வளர்ந்துவிட்டதால், கருக்கலைப்பின் போது, குறைமாத குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும், இது குழந்தைக்கு நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்தி வாழ்நாள் முழுதும் வலியை உண்டாக்க கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமி 18 வயதாகும் வரை அவரை காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும், பிறக்கும் குழந்தையை தத்துக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.