தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இதுவரை 110 பேர் பலி!

இதுவரை 110 பேர் பலி!

இதுவரை 110 பேர் பலி!


UPDATED : ஜன 23, 2026 06:52 AM

ADDED : ஜன 22, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2026 06:52 AM ADDED : ஜன 22, 2026 11:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இதுவரை 110 பேர் பலியாகியுள்ளனர். முதியவர்கள் உட்பட பலர் விசாரணைக்காக, தினமும் 6 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. ஆவணங்கள் இல்லாத முந்தைய தலைமுறையினரை ஏன் துன்புறுத்த வேண்டும்?

மம்தா பானர்ஜி மே. வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்

பொருளாதார மீள்திறன் அதிகரிப்பு!


குறைந்த கடன் அளவு கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மத்திய அரசின் கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57 சதவீதம்; அனைத்து மாநிலங்களையும் சேர்த்தபின் அதிகபட்சமாக 85 சதவீதமாகும். வெளிநாட்டு கடன் குறைவாக உள்ளதால், நம் பொருளாதாரத்தின் மீள்திறன் அதிகரித்து உள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஓட்டுக்காக நாடகம்!


ஓட்டுக்களை பெறவே, தான் தேநீர் விற்றதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். அவர், எப்போதாவது தேநீர் போட்டுள்ளாரா? மக்களுக்கு தேநீர் பரிமாறியிருக்கிறாரா?. இது, எல்லாம் நாடகம். நேரு, கொண்டு வந்த பெரிய திட்டங்களைப் போல் இவர்கள் செய்த ஒரு பணியை சொல்லுங்கள்.

மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us