ரூ.1.20 லட்சம் கோடி மதிப்பில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு கண்டுபிடிப்பு
ரூ.1.20 லட்சம் கோடி மதிப்பில் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு கண்டுபிடிப்பு
ADDED : ஆக 22, 2024 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜி.எஸ்.டி., யில் உள்ளீட்டு வரிப்பயன் மோசடி யால், கடந்த 2020ம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை 'ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம்' கண்டுபிடித்துள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
போலி நிறுவனங்களை கண்டுபிடிக்க, மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நாடு முழுதும் கடந்த ஆகஸ்ட் 16 முதல், சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த சோதனைகள் நடைபெற உள்ளன. வரி ஏய்ப்பு நிறுவனங்களை கண்டுபிடித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து, அரசின் வருவாயை பாதுகாப்பதே இந்த சோதனையின் நோக்கம்.