13.50 லட்சம் ஏக்கர் நிலக்கடலை இலைப்புள்ளி நோயால் சேதம்
13.50 லட்சம் ஏக்கர் நிலக்கடலை இலைப்புள்ளி நோயால் சேதம்
ADDED : டிச 14, 2024 04:08 AM

பெலகாவி: ''இலைப்புள்ளி நோயால் மாநிலத்தில் 13.50 லட்சம் ஏக்கர் நிலக்கடலை பயிர் சேதம் அடைந்துள்ளது,'' என, மாநில தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கூறினார்.
சட்டசபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் பீமண்ணா நாயக், பா.ஜ., உறுப்பினர்கள் அரக ஞானேந்திரா, ஹரிஷ், அவினாஷ் ஜாதவ், ம.ஜ.த., உறுப்பினர் ரவிகுமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, மாநில தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் அளித்த பதில்:
மாநிலத்தில் 13.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த, நிலக்கடலை பயிர் இலைப்புள்ளி நோயால் சேதம் அடைந்துள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்த, ஷிவமொக்கா தோட்டக்கலை பல்கலைக்கழக வல்லுநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நோய் எப்படி பரவுகிறது என்று ஆராய, மாநில அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளது.
இலைப்புள்ளி நோய் மூன்று வகை பூஞ்சைகளால் பரவுகிறது.
குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் நோய் வேகமாக பரவுகிறது. நோயை கட்டுப்படுத்த நிலக்கடலை விவசாயிகளுக்கு ஹெக்சோகோனசோல், டெபுகோனசோல், புரோபிகோனசோல் போன்ற தாவர பாதுகாப்பு மருந்துகளை அரசு வழங்குகிறது.
நோய் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இழப்பீடு வழங்க, மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மூலம், மத்திய அரசிடம் 225.73 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளோம்.
விவசாயம் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ், பராம்பரியமாக பாக்கு பயிரிடும் பகுதிகளில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதமும், பட்டியல், பழங்குடியினருக்கு 50 சதவீதம் அரசுமானியம் வழங்குகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.

