ADDED : நவ 28, 2024 06:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நாடு முழுவதும் 136 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இயக்கப்பட்டு வருவதாக, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்லியில் தெரிவித்தார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த 9 எம்.பி.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
நவ.,21ம் தேதி கணக்குப்படி, நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், தானியங்கி ரயில் பாதுகாப்பு கவசம் 'கவாச்', முழுவதும் அடைக்கப்பட்ட கேங்வே, தானியங்கி கதவுகள், சுகமான பயண அனுபவம், மினி பேன்ட்ரி, பாட்டில் கூலர், டீப் ப்ரீஸர், சுடு தண்ணீர் வைக்கும் கலன் ஆகிய வசதிகள் உள்ளன.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.