இது ரொம்ப ஓவர்: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
இது ரொம்ப ஓவர்: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
UPDATED : செப் 25, 2024 10:28 PM
ADDED : செப் 25, 2024 09:28 PM

மும்பை: ஒரு வழக்கில் 15 மணி நேரம் விசாரணை நடத்துவது என்பது வீரமல்ல எனக்கூறியுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட், அது மனிதநேயத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்து உள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வர் என்பவரை கடந்த ஜூலை மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி மகாபீர் சிங் சிந்து கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர், ஜூலை 19 ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜர் ஆனார். விசாரணையை துவங்கிய அதிகாரிகள், மறுநாள் காலை 1:40 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் 14 நிமிடங்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இது அமலாக்கத்துறையின் தைரியம் அல்ல. இது மனித நேயத்திற்கு எதிரானது.
வரும் காலத்தில் அரசியல்சாசனத்தின் 21வது சட்டப்படி, அமலாக்கத்துறையானது இதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணைக்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.