sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போக்குவரத்து விதிமீறல் ரூ.14 லட்சம் அபராதம்

/

போக்குவரத்து விதிமீறல் ரூ.14 லட்சம் அபராதம்

போக்குவரத்து விதிமீறல் ரூ.14 லட்சம் அபராதம்

போக்குவரத்து விதிமீறல் ரூ.14 லட்சம் அபராதம்


ADDED : நவ 11, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: போக்குவரத்து விதிமீறல் செய்ததாக, செயலி அடிப்படையில் இயங்கும் இ - டாக்சி, உணவு வினியோகம், பிற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீது 2,670 வழக்குகள் பதிவு செய்த போக்குவரத்து போலீசார், 13.78 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்து உள்ளனர்.

பெங்களூரில் செயலி மூலம் இ - டாக்சி, உணவு வினியோகம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. இது தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 781 பேரும்; வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பேசியது 26; சிக்னல் ஜம்ப் 45; நோ என்ட்ரியில் சென்றது 404; டூ வீலரில் மூவர் பயணித்தது 52; வாகன நிறுத்த அனுமதியில்லாத இடத்தில் நிறுத்தியது 105; நம்பர் பிளேட் குறைபாடு 119; நடைபாதையில் ஓட்டியது 44; நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது உட்பட 2,670 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இவர்களிடம் இருந்து 13.78 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us