sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளி வகுப்பறையில் பகீர் சம்பவம்! சக மாணவனை கத்தியால் குத்திய சிறுவன்!

/

பள்ளி வகுப்பறையில் பகீர் சம்பவம்! சக மாணவனை கத்தியால் குத்திய சிறுவன்!

பள்ளி வகுப்பறையில் பகீர் சம்பவம்! சக மாணவனை கத்தியால் குத்திய சிறுவன்!

பள்ளி வகுப்பறையில் பகீர் சம்பவம்! சக மாணவனை கத்தியால் குத்திய சிறுவன்!

11


ADDED : டிச 21, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 21, 2024 07:29 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்; ஒடிசாவில் பள்ளியில் சக மாணவனை கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது பற்றிய விவரம் வருமாறு: கேந்திரபாரா மாவட்டம் பட்டாமுண்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 8ம் வகுப்பு ஒன்றில் மாணவர்கள் வழக்கம் போல் அமர்ந்திருந்தனர். அப்போது, மாணவர் ஒருவர், கத்தியால் அருகில் இருந்த மற்றொரு மாணவரை சரமாரியாக குத்தி உள்ளார்.

நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் பெரும் பரபரப்பு எழுந்தது. அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், படுகாயம் அடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கத்தியால் குத்திய மாணவரை கைது செய்தனர். எதற்காக கத்திக்குத்து சம்பவம் நடந்தது என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாக வில்லை.

ரத்தம் தோய்ந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், கத்தியை எப்படி எடுத்து வந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us