ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு :15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு :15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
UPDATED : செப் 22, 2026 09:54 PM
ADDED : செப் 22, 2026 09:52 PM
கொழும்பு:இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தொடர் தற்கொலைப் படை தாக்குதல் வழக்கில், 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், 2019, ஏப்ரலில், ஈஸ்டர் ஞாயிறன்று, 3 சர்ச்சுகள் மற்றும் 3 சொகுசு விடுதிகளில், 9 பேர் கொண்ட கும்பலால், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்; 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நேஷனல் தவுஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த, 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒருவர் சிறையில் இருந்தபோது உயிரிழந்தார்.
மீதமுள்ளோர் மீதான வழக்கில், கொழும்பு உயர் நீதிமன்றத்தின், மூன்று பேர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 9 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
