டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: 18 பேர் பலி, 10 பேர் காயம்
டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: 18 பேர் பலி, 10 பேர் காயம்
UPDATED : பிப் 16, 2025 08:39 AM
ADDED : பிப் 15, 2025 11:32 PM

புதுடில்லி: டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.
கும்பமேளா செல்வதற்காக டில்லி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரவு 9:15 மணிக்கு அதிக அளவில் பயணிகள் திரண்டனர். இதையடுத்து 13 மற்றும் 114 பிளாட்பார்ம்களில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியானார்கள்.. 10 பேர்காயம் அடைந்ததாக டில்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனை தெரிவித்துள்ளது
பிரயாக்ராஜ் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு தீயணைப்பு வண்டிகளில் மீட்புப்பணி நடந்து வருகிறது. நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு தேரிய பேரிடர் குழுவினர் விரைந்துள்ளனர்
இழப்பீடு
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
டில்லி ரயில்நிலைய நெரிசல் காரணமாக 18 பேர் பலியானது குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்

