ADDED : அக் 07, 2024 12:06 AM

காடுகோடி : ஏலச்சீட்டு நடத்தி 1.50 கோடி ரூபாய் மோசடி செய்த, தம்பதி - மகன் கைது செய்யப்பட்டனர்.
குடகின் தலக்காடுவை சேர்ந்தவர் சந்திரசேகர், 51. இவரது மனைவி மகாதேவம்மா, 48. இவர்களின் மகன் சேகர், 27. மூன்று பேரும் கடந்த 10 ஆண்டுகளாக, பெங்களூரின் காடுகோடி பெல்லந்துாரில் வசித்தனர்.
மகாதேவம்மா ஏலச்சீட்டு நடத்தினார். அவரிடம் பெண்கள் 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, பணம் கட்டினர். கடந்த ஆகஸ்ட் மாதம் தம்பதி, மகன் வீட்டை காலி செய்து தலைமறைவாகினர்.
பணம் கட்டியவர்கள் பல முறை, மொபைல் போனில் அழைத்தும் எடுத்து பேசவில்லை. காடுகோடி போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணயில் 1.50 கோடி ரூபாயுடன் தலைமறைவானது தெரியவந்தது. மூன்று பேரும் மைசூரில் வசிப்பதாக, காடுகோடி போலீசாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் மைசூரு சென்று, மூன்று பேரையும் கைது செய்தனர். பெங்களூரு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.